சமீப காலமாய் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது
சே ரசிகர்களை அது சிந்திக்க வைத்துள்ளது.சே வின் பெயர் பிரபலம் அடைய காரணம் மாது சேங் பெயரை மக்கள் மறப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தி. உண்மையில் அதுவல்ல காரணம். அமெரிக்காவை எதிர்தவனுக்கு அமெரிக்காவில் தான் ரசிகர்கள் அதிகம். சே ஒரு நிறைந்த மனிதன்.ஒருவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவன். அவன் நினைத்து இருந்தால் கியூபா விலே நிம்மதியாய் வாழ்ந்து இருக்கலாம்.ஆனால் அவன் அதை செய்யவில்லை.பொலிவிய காடுகளில் அவன் சுற்றி திரிய காரணம் என்ன? “என் கால்கள் செல்லும் இடம் எல்லாம் என் உலகம்” என்று கூறியவன் . பூங்குன்றனார் போல் யாதும் ஊரே தத்துவம் தான் அது. இன்று அவனை போற்றுபவர்கள் அனைவரும் அவன் சரித்திரத்தை சிறிதேனும் அறிந்தவர்கள்.வாழ்கையை முழுதாய் வாழ்ந்த சிலரில் அவனும் ஒருவன்.அவனை பற்றி படித்தவர்கள் வியந்தது ஒன்று தான் அது அவன் ஆளுமை.முப்பத்தி ஒன்பது வயதில் வாழ்வை முழுதாய் வாழ்ந்து முடித்தான்.அவனிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வாழ்க சே




